கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோயில்களில் தரிசனக்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாகர்கோவிலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயில்களில் தரிசனக்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாகர்கோவிலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் நாகராஜா கோயில் முன் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவர் நம்பிராஜன் தலைமை வகித்தார். நகரச் செயற்குழு உறுப்பினர் பிரவீன் வரவேற்றார்.
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், கோயில் வருமானத்தை கோயிலுக்கே செலவிட வேண்டும், இந்துக் கோயில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தலைவர் சிவா, கிளைச் செயலர்,  செந்தில்குமார், மாவட்டப் பொதுச்செயலர் ஆர்.கே. கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில்  நகர பொதுச்செயலர் மகாராஜா, அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவர் பெரியசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெயசந்திரன், நகரத் துணைத் தலைவர் திருமணி , அய்யாவழி அருள்இசைப் புலவர் சிவசங்கரன், வழக்குரைஞர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கார்த்திகேயன் நன்றி கூறினார்.  குமரி மாவட்டத்தில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி: தோவாளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.  நகரத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர் பழனி,  ஒன்றியச் செயலர் நாகராஜன்,  விசுவ ஹிந்து பரிஷத் காளியப்பன்,  பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்,  பாஜக தலைவர் ம.தேவன் பிள்ளை,  வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலர் சுடலைமுத்து, ஆரல்வாய்மொழி பாஜக செயலர் திருமலைக்குமார்,  அமைப்பு சாரா தொழில் சங்க தலைவர் ராஜன், பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  ஆரல்வாய்மொழி இந்து முன்னணி துணைத் தலைவர் முருகன் நன்றி கூறினார்.
குலசேகரம்: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒன்றிய இந்து முன்னணித் தலைவர் வினில்குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் மிசா சோமன், செயலர் ரவி, பொதுச் செயலர் ஐயப்பன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சுஜித்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com