கல்வியின்மைதான் இளம் குற்றவாளிகளை உருவாக்குகிறது: மகளிர் நீதிமன்ற நீதிபதி

கல்வியின்மைதான் சமுதாயத்தில் இளம் குற்றவாளிகளை உருவாக்குகிறது என்றார் குமரி மாவட்ட மக்கள் நீதிமன்றம் மற்றும் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம்.

கல்வியின்மைதான் சமுதாயத்தில் இளம் குற்றவாளிகளை உருவாக்குகிறது என்றார் குமரி மாவட்ட மக்கள் நீதிமன்றம் மற்றும் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம்.
கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியன இணைந்து நடத்திய உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
இன்றைய சூழ்நிலையில், பெண் குழந்தைகளுக்கு தங்கள் சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை. குழந்தைகளின் வருமானம், பெற்றோர்களுக்கு அவமானம் என்பது ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையிலும் பின்பற்றப்பட வேண்டும். குழந்தைகளை யாராவது பணியில் அமர்த்தினாலோ அல்லது குழந்தைகளுக்கு எதிரான அநீதிகள் குறித்தோ தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1098-ஐ பயன்படுத்தலாம்.
சட்டப்படி அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். பள்ளியில் மாணவர்கள் இடையில் கல்வியை நிறுத்துவது, இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் கடமை ஊடகங்களுக்கு உள்ளது என்றார் அவர்.
பள்ளித் தலைமை ஆசிரியை ஏ. நல்லபாக்கியலட்சுமி வரவேற்றார். குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் சார்பு நீதிபதி ஏ. பசும்பொன் சண்முகையா, வழக்குரைஞர் என். அனிதாராஜன், சமூக ஆர்வலர் மருத்துவர் டி.கே. நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வி. கண்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com