தோவாளை கழிவு நீரோடையை சீரமைத்த மக்கள்

தோவாளை சானலில் கழிவுநீரோடையில் ஏற்பட்ட உடைப்பை மக்களே சீரமைத்தனர்.

தோவாளை சானலில் கழிவுநீரோடையில் ஏற்பட்ட உடைப்பை மக்களே சீரமைத்தனர்.
தோவாளை ஊராட்சியின் சில பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது தோவாளை சானலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ஓடை வழியே மறுபுறம் செல்கிறது. இந்நிலையில், சானலின் குறுக்கே செல்லும் கழிவு நீரோடையில் உடைப்பு ஏற்பட்டு சானலில் சாக்கடை கலந்து தண்ணீர் மாசுபட்டது. இது குறித்து, பொதுப்பணித் துறைக்கும், உள்ளாட்சித் துறைக்கும் புகார் தெரிவிக்கப்பட்டும் அதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
தற்போது, சானலில் தண்ணீர் வராத நிலையில் கழிவு நீரானது சானலின் மேல் பகுதியில் கழிவுகளும் கழிவு தண்ணீருமாக தேங்கி நோய்கள் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தோவாளை ஒன்றிய தி.மு.க சார்பில் கப்பல் விடும் போராட்டம், மீன்பிடி போராட்டம் என பல போராட்டங்கள் நடத்தியும் பலனளிக்கவில்லையாம். இதையடுத்து, தோவாளை வடக்கூர் ஊர்த் தலைவர் மதுசூதனன், கிருஷ்ணன் புதூர் ஊர்த் தலைவர் சொக்கலிங்கம், தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலர் நெடுஞ்செழியன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தாணு ஆகியோரின் முன்னிலையில் சித்திரை, கோபி, கண்ணப்பன் உள்ளிட்ட பொதுமக்கள் ஓடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com