மேம்பாலப் பணி: பார்வதிபுரம் - வெட்டூர்ணிமடம் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பார்வதிபுரம் - வெட்டூர்ணிமடம் சாலை மேம்பால பணிக்காக மூடப்படுவதால் வாகனங்கள் வெட்டூர்ணிமடத்திலிருந்து பால்பண்ணை வழியாக

பார்வதிபுரம் - வெட்டூர்ணிமடம் சாலை மேம்பால பணிக்காக மூடப்படுவதால் வாகனங்கள் வெட்டூர்ணிமடத்திலிருந்து பால்பண்ணை வழியாக இயக்கப்பட உள்ளன.  சோதனை முயற்சியாக வெள்ளிக்கிழமை(ஜூன்30) ஒருநாள் போக்குவரத்து மாற்றிவிடப்படுகிறது.
பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் கடந்த மார்ச் 18 ஆம் தேதி தொடங்கியது. முதலில் பார்வதிபுரம் } வெட்டூர்ணிமடம் இடையிலான  எம்.எஸ். சாலை , கே.பி. சாலை ஆகியவற்றில்  தூண்களுக்கான அடித்தளப்பணி நிறைவுபெற்றது.  இதைத் தொடர்ந்து பார்வதிபுரம் பேருந்து நிறுத்தம்  பகுதியில்தூண்கள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும்,  பார்வதிபுரம் எம்.எஸ். சாலையில் மேம்பாலப் பணிக்காக இரும்பு தூண் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளையொட்டி,  எம்.எஸ். சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, வெட்டூர்ணிமடத்திலிருந்து பார்வதிபுரத்துக்கு மட்டுமே வாகனங்கள் செல்கின்றன.  இந்நிலையில் பார்வதிபுரம் சந்திப்பு பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தூண் அடித்தளத்தில் நட்டுகள் அமைக்க ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக பார்வதிபுரம்} எம்.எஸ். சாலையில் முற்றிலும் வாகனப் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்துத் துறை அதிகாரிகள்,  நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர்  ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் ஆரல்வாய்மொழியிலிருந்து கள்ளியங்காடுக்கு திருப்பிவிட வேண்டும் எனவும், எம்.எஸ். சாலையில் எந்த வாகனமும் இயக்க முடியாது எனவும் நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், வடசேரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பார்வதிபுரம் செல்லாமல் கள்ளியங்காடு வழியாக இயக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் பார்வதிபுரம் செல்லாமல் இருந்தால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாவார்கள் என போக்குவரத்து துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்து வடசேரியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தையும் வெட்டூர்ணிமடத்திலிருந்து பால்பண்ணை வழியாக பார்வதிபுரத்துக்கு திருப்பிவிடலாம்; வெட்டூர்ணிமடம் முதல் பால்பண்ணைவரை உள்ள சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சோதனை முயற்சியாக வெள்ளிக்கிழமை (ஜூன் 30)  மட்டும் வெட்டூர்ணிமடம் } பால்பண்ணை சாலையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  பார்வதிபுரம் } வெட்டூர்ணிமடம் சாலை மூடப்படுகிறது.
இந்த சோதனைமுயற்சி வெற்றிபெற்றால் பார்வதிபுரம்} எம்.எஸ். சாலையில் மேம்பால பணி முடியும்வரை பால்பண்ணை சாலையில் வாகனங்கள் இயக்கப்படும் என  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com