சாலை விபத்தில் 4 மாணவிகள் சாவு விபத்து தவிர்ப்பு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அறிவுரை

குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தவிர்க்க முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தவிர்க்க முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புலியூர்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பலியான கல்லூரி மாணவிகளுக்கு, மத்திய இணை அமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், சுங்கான்கடையிலிருந்து தக்கலை, குளச்சல் ஆகிய இடங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் செல்ல காலை, மாலை நேரங்களில் உடனடியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யவும், மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இருந்து காலை, மாலை நேரங்களில் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி அமைத்து அதனை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கு குறிப்பிட்ட இடங்களை கடக்க குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்பட வேண்டும். அதனை வாகன ஓட்டுநர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இதனை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com