போலி அனுமதிச்சீட்டுடன் மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் பறிமுதல்

போலி அனுமதிச்சீட்டுடன் மணல் மற்றும் கல் ஏற்றி வந்த 5 லாரிகள் பிடிபட்டன.

போலி அனுமதிச்சீட்டுடன் மணல் மற்றும் கல் ஏற்றி வந்த 5 லாரிகள் பிடிபட்டன.
உதவி ஆய்வாளர் செந்தில்வேல் தலைமையிலான கனிமவள தடுப்பு தனிப்படை போலீஸார், ஞாயிற்றுக்கிழமை ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு வந்த 2 கனரக லாரிகளை சோதனை செய்தபோது, அவற்றில் போலி அனுமதிச்சீட்டுடன் கூடுதல் பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது. மற்றொரு லாரியில் அனுமதிச்சீட்டு இல்லாமல் பாரம் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதேபோல், மார்த்தாண்டத்திலிருந்து எந்த வித ஆவணங்களும் இல்லாமல் 2 லாரிகளில் வரி கல் ஏற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com