குமரியில் சித்த வர்மக் கருத்தரங்கு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் 2 நாள் தேசிய பாரம்பரிய சித்த வர்மக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் 2 நாள் தேசிய பாரம்பரிய சித்த வர்மக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து மீண்டும் மக்களிடையே புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். அனைத்து மக்களும் இதன் பயனைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் விவேகானந்த கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்டம் சார்பில் "முதியோர் மற்றும் குழந்தைகளின் நலனின் வர்ம வைத்தியம்' என்ற தலைப்பில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
வர்மம் தொடர்பான செயல்முறை விளக்கம், எலும்பு ஒடிவு முறிவுப் பயிற்சி, பிணிகளுக்கான வர்ம பரிகார முறைகள் இக்கருத்தரங்கில் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் வர்மம் தொடர்பான நூல்கள் மற்றும் குறுந்தகடு வெளியிடப்பட்டது.
 தொடக்க விழா நிகழ்வுக்கு விவேகானந்த கேந்திர சித்த மருத்துவர் வே.கணபதி தலைமை வகித்தார். எஸ்.ரகுபதி இறைவணக்கம் பாடினார். கேந்திர நார்டெப் இயக்குநர் வி.ராமகிருஷ்ணன் வரவேற்றார். வர்மம் தொடர்பான நூல் மற்றும் குருந்தகடை கேந்திர செயலர் ஜி.வாசுதேவ் வெளியிட்டார். நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக தேர்வாணையர் வி.உமையொருபாகன் சிறப்புரையாற்றினார். வர்ம மருத்துவர்கள் வை.அரசுராஜா, நாராயணன், தமிழழகன் உள்ளிட்டோர் பேசினர். ஜாண் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com