நாகர்கோவிலில் அறிவியல் கண்காட்சி

நாகர்கோவிலில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகர்கோவிலில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஹோம் சர்ச் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தொடங்கி வைத்தார்.  இந்த  கண்காட்சியில்  70 பள்ளிகளிலிருந்து  சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.    ஒரு மாணவர் ஒரு படைப்பு (6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம்  வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை),  இரு மாணவர் ஒரு படைப்பு (8 ஆம் வகுப்பு 9 ஆம் வகுப்பு மற்றும்   10-ஆம் வகுப்பு),   ஆசிரியர் படைப்பு, கணித கருத்தரங்கம் மற்றும் அறிவியல் பெருவிழா ஆகிய ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டன.  இதில் ஒவ்வொரு பிரிவிற்கும் மூன்று பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள்   வழங்கப்பட்டன.
  நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  எஸ். பாலா,  மாவட்டக் கல்வி அலுவலர்கள் (நாகர்கோவில்)  டி. ஆறுமுகம், ஏ. ரேணுகா (குழித்துறை),   பி. மரிய தங்கராஜ் (பொ) (தக்கலை),  மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம்)  சி. வள்ளிவேலு, உதவி திட்ட அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) சு. வில்வம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்    பி. நடராஜன்,  ஹோம் சர்ச்  மகளிர் மேல்நிலைப்பள்ளித்  தலைமையாசிரியர் ஜா. ஜான்ஸி லதா, குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜி. கிஷோர், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்  எஸ். சகாயதாஸ்,  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com