பேரிடர் மேலாண்மை குறித்த போட்டிகள்: மாணவர்களுக்கு பரிசளிப்பு

குமரி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

குமரி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் அக். 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதை முன்னிட்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி,  பேரிடரால் ஏற்படக்கூடிய இறப்புவிகிதத்தை குறைத்தல் குறித்து ஆய்வுக்கட்டுரை வெளியிடுதல் மற்றும் ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில்  தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மாவட்ட அலுவலர் கல்யாணகுமார் தலைமையில், அத்துறையினரால் நடத்தப்பட்ட தீயணைப்பு குறித்த செயல்முறை பயிற்சி நடைபெற்றது.   மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகளும், கட்டுரைப் போட்டிகளும் மற்றும் ஓவியப்போட்டிகளும் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு, பாராட்டுச்சான்றிதழ்களையும், நினைவு பரிசுகளையும்  ஆட்சியர் சஜ்ஜன்சிங்ரா.சவாண் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ, இந்தியன் செஞ்சிலுவைச் சங்கச் செயலாளர் அ.பிரேமலலிதா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அ. ஆறுமுகநயினார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் கா.கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com