குமாரகோவில் வேளிமலை கோயிலில் புஷ்பாபிஷேகம்

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமிக்கு புஷ்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமிக்கு புஷ்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நடை காலை அதிகாலை 4 .30 மணிக்கு திறக்கப்பட்டது. 4.45-க்கு நிர்மால்யம், 5 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 12 மணிக்கு அலங்கார பூஜையும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
மாலையில் நடைபெற்ற பூஜைக்கு பின்பு அருள்மிகு குமாரசுவாமி, வள்ளியம்மை, உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் புஷ்பாபிஷேகம் தொடர்ந்து 3 மணிநேரம் நடைபெற்றது. பின்னர் குமாரசுவாமிக்கு அலங்கார சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பூஜையில் பெரும்திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கோயில் கொடிமரம் மற்றும் கல்தூண்களும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மேலாளர் மோகன குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com