கேரளத்தில் விஷு கணி காணல்:  செங்கல் சிவபார்வதி கோயிலில் சிறப்பு வழிபாடு

கேரளத்தில் விஷு கணி காணல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதையொட்டி,  குமரி மாவட்ட கோயில்களிலும்

கேரளத்தில் விஷு கணி காணல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதையொட்டி,  குமரி மாவட்ட கோயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்பட்டது.
கேரளத்தில் சித்திரை (மேட மாதம்) முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கேரள முறைப்படி பூஜைகள் நடைபெறும் குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்,  மார்த்தாண்டம் அருகேயுள்ள கண்ணக்கோடு கிருஷ்ணசுவாமி கோயில்,  திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில்,  திற்பரப்பு மகாதேவர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயம், தும்பக்கோடு அச்சாளீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் விஷு கணி காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமி முன் பலவகை காய் கனிகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
கேரள மாநில எல்லையோரப் பகுதியில் உள்ள செங்கல் சிவபார்வதி கோயில் உள்பிரகாரத்தில் காய்கனிகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பின்னர் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கைநீட்டம் மற்றும் காய்கனிகளை வழங்கினார்.
தொடர்ந்து திருவனந்தபுரம் புஷ்பா கிருஷ்ணன் தலைமையில் மாணவர்களின் சங்கீதக் கச்சேரி நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com