மணவாளக்குறிச்சியில் அரியவகை மணல் ஆலை மீண்டும் திறப்பு: விஜயகுமார் எம்.பி. பங்கேற்பு

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலைப் பணிகளை விஜயகுமார் எம்.பி. திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலைப் பணிகளை விஜயகுமார் எம்.பி. திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில், மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அரிய மணல் ஆலை உள்ளது. இந்த ஆலையில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட  தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த ஆலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததாலும், மாநில அரசின் போக்குவரத்து அனுமதி கிடைக்காததாதலும்  ஆலையை மூடும் நிலை ஏற்பட்டது.  
கடந்த ஜனவரி மாதம் இந்த ஆலை முழுமையாக மூடப்பட்டது.  இதனால் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்தஆலையை மீண்டும் திறக்க  மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,  விஜயகுமார் எம்.பி., ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர். 
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்தது. மேலும் மாநில அரசின் போக்குவரத்து அனுமதியும் வழங்கப்பட்டது. 
இந்நிலையில், விஜயகுமார் எம்.பி.  திங்கள்கிழமை மணவாளக்குறிச்சியில் ஆலைப் பணிகளைத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆலைத் தலைவர் ஜனா, அதிகாரிகள் செல்வராஜ், பரத், குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் சகாயம், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் கனகராஜ், அரசு வழக்குரைஞர் சந்தோஷ்குமார், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலர் சந்தையடி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com