இறை பராமரிப்பு இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளை  முன்னிட்டு, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளை  முன்னிட்டு, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குமாரபுரம் அருகேயுள்ள கலயன்கோணம்  இறை பராமரிப்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜாண் கிறிஸ்டோபர் (தக்கலை), ஜெகன்ராஜ் (திருவட்டாறு),  பத்மநாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், அலெக்ஸாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்ரஹாம் ராய் மணி , மாவட்ட பொதுச் செயலர் ஜாண் இக்னேசியஸ், மாநில பொதுக் குழு உறுப்பினர்  லாரன்ஸ்  மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
குளச்சல் தொகுதிக்குள்பட்ட திங்கள் நகர் அருகேயுள்ள பட்டரிவிளையிலுள்ள கான்வென்டில் நடைபெற்ற விழாவில்,  கான்வென்டில் தங்கி கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை குளச்சல் எம்.எல்.ஏ. ஜே.ஜி.பிரின்ஸ் வழங்கினார். இதில், மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 
நாகர்கோவில்: குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டதி பள்ளி சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கேக் வெட்டப்பட்டது. இதில், பிரின்ஸ் எம்எல்ஏ, மாவட்டத் துணைத் தலைவர் மகேஷ் லாசர் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
கருங்கல்: கிள்ளியூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில்,  தலைவர் ஜோபின்சிரில் தலைமையில், வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ் முன்னிலையில், கருங்கல் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு, கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உணவுப் பொருள்களை வழங்கினார். 
களியக்காவிளை: காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறை சார்பில், குமரி மேற்கு மாவட்ட மனித உரிமைத் துறை தலைவர் இ.ஜி. ரவிசங்கர் தலைமை வகித்து, குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com