குமரியில் தேசிய கராத்தே போட்டி

கன்னியாகுமரியில் சிட்டோரியு கராத்தே பள்ளி சார்பில் 3-ஆவது தேசிய அளவிலான கராத்தே போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரியில் சிட்டோரியு கராத்தே பள்ளி சார்பில் 3-ஆவது தேசிய அளவிலான கராத்தே போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
 இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தில்லி, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. பல்வேறு பிரிவுகளாக  நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை ஆந்திரப் பிரதேச அணியும், இரண்டாமிடத்தை தமிழக அணியும், மூன்றாமிடத்தை கேரள அணியும் பெற்றன. போட்டியின் தொடக்க விழா நிகழ்வுக்கு ஆசிய கராத்தே சங்க நடுவர் கே.கே.எச்.ராஜ் தலைமை வகித்தார். புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி ஆசிரியை மெலானி வரவேற்றார். போட்டியை ஆசிய கராத்தே சங்க (குமிட்டி பிரிவு) நடுவர் டி.இ. கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். இந்திய சிட்டோரியு கராத்தே சங்க நடுவர் எஸ்.வெங்கடேஸ்வரராவ், குமரி மாவட்ட கராத்தே சங்கச் செயலர் பி.சண்முகம், அருள்பணி.  ஆர்.போபின்போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 பரிசளிப்பு விழாவுக்கு, நாகர்கோவில் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.காமராஜ் தலைமை வகித்தார். ஏ.வி.ஆன்றோ முன்னிலை வகித்தார். 
புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி நிர்வாகி ஜோசப் தாமஸ், அகஸ்தீசுவரம் ஞானதீபம் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜே.ஐடா ஜான்சி, கன்னியாகுமரி ரோட்டரி சங்கத் தலைவர் கே.ராபர்ட்சன், குமரி மாவட்ட பாக்சிங் கராத்தே சங்க துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். அழகப்பபுரம் புனித இருதய பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எல்.பிரைட் மேரிகிரேஸ் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com