சர்ச்சைக்குரிய நாள்காட்டி: கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் அறிக்கை

நாள்காட்டியில் சர்ச்சைக்குரிய படம் வெளியானது குறித்து, குமரி மாவட்டம்,    ராஜாவூர் தூயமிக்கேல் அதிதூதர் திருத்தல பங்குத்தந்தை மதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாள்காட்டியில் சர்ச்சைக்குரிய படம் வெளியானது குறித்து, குமரி மாவட்டம்,    ராஜாவூர் தூயமிக்கேல் அதிதூதர் திருத்தல பங்குத்தந்தை மதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் மிகவும் பழமையான பங்காகும். இந்த ஆலயத்தில் மக்கள் வழிபாட்டிற்காக புனித மிக்கேல் அதிதூதர் சொரூபம் வைக்கப்பட்டுள்ளது. இச்சொரூபத்தில் எந்த மதத்தினரையும் புண்படுத்தும் விதமான  அடையாளங்கள் கிடையாது. 
இந்நிலையில் சமீபத்தில் வெளியான சில  நாள்காட்டிகள் மற்றும் சில நோட்டீஸ்களில் தவறுதலான படம் வெளியாகியுள்ளது.  அந்த நாள்காட்டிகள், நோட்டீஸ்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. 
ஏற்கெனவே வெளியிட்டவற்றை திரும்பப் பெற்று அழிக்கவும் ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பிற மதத்தை அவமதிக்கின்ற எண்ணம் ராஜாவூர் கோயில் நிர்வாகத்திற்கு கடுகளவும் இல்லை.  தவறான படம் மூலம் யாராவது மன வருத்தப்பட்டிருந்தால், இப்பங்கிலுள்ள அனைவரும் மிகுந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com