வடசேரியில் தாய்சேய் நல மருத்துவ முகாம்

வடசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே தொடங்கி

வடசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துவதுறையின் சார்பில் பிப்.24 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை, குமரி மாவட்டம் முழுவதும் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 9 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
இம்முகாமில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி, ரத்தம் மற்றும் முழு ஆய்வகப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, 5 வயத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனை மற்றும் தடுப்பூசி, அனைத்து தாய்சேய் நலவிவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து பிக்மி எண் வழங்குதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் பதிவுசெய்தல், மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், சிறப்புகவனம் தேவைப்படும் தாய்மார்களுக்கு உடனடியாக மருத்துவ உயர் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், 30 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் கர்ப்பவாய் மற்றும் மார்பக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் வடசேரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மேல்புறம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், வெள்ளிச்சந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பிப். 24 ஆம் தேதி இம்முகாம் நடைபெற்றது.
மேலும் பிப். 27ஆம் தேதி பள்ளியாடி, சுருளோடு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மார்ச்2 ஆம் தேதி கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 5 ஆம் தேதி அருமநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தொல்லவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 6 ஆம் தேதிதூத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறும்.
வடசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாமில் நாகர்கோவில் நகராட்சி ஆணையர் கே.சரவணகுமார் மற்றும் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com