குலசேகரத்தில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வுப் பேரணி

குலசேகரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 

குலசேகரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
பேரூராட்சி நிர்வாகம்,  ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இப்பேரணிக்கு,  பேரூராட்சி செயல் அலுவலர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர். அனுஷா முன்னிலை வகித்தார். 
இதில், கல்லூரி பேராசிரியர் ரெஞ்சிஸ்,  சுகாதார ஆய்வாளர் ஜெகன், பேரூராட்சி ஊழியர்கள்  சுரேஷ்குமார்,  கிளிட்டஸ்,  சந்திரன்,  ஹரிகுமார், முருகேசன்,  எட்வின் சாம்,  ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, மாமூடு சந்திப்பு,  காவல் ஸ்தலம்,  நாகக்கோடு, சந்தை சந்திப்பு,  மணலிவிளை வழியாக மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது. 
பேரணியில் போகி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி மாசு ஏற்படுத்தும் வகையில் பொருள்களை எரிப்பதை தவிர்க்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தொடர்ந்து கோலப் போட்டி,  கட்டுரைப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com