செம்மருதங்காடு பகவதி கோயில் தைத் திருவிழா நாளை தொடக்கம்

குழித்துறை அருகேயுள்ள குறுமத்தூர், செம்மருதங்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் 46 ஆவது தைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 14) தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.

குழித்துறை அருகேயுள்ள குறுமத்தூர், செம்மருதங்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் 46 ஆவது தைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 14) தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.
 விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோம், சிறப்பு பூஜைகள், சமய மாநாடு, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெறும். விழாவின் முதல்நாள் காலை 9 மணி முதல் மாலை வரை ஸ்ரீமத் பகவத்கீதை ஞான யக்ஞம் நடைபெறும். அன்றைய தினம் காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாடும், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை வழிபாடும் நடைபெறும்.  2 ஆம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு சமயவகுப்பு மாணவர்களுக்கான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெறும். 7 ஆம் நாள் விழாவில் பிற்பகல் 2 மணிக்கு கஜபூஜை, 2.30 மணிக்கு அம்மன் யானை மீது பவனி வருதல் நடைபெறும். அம்மன் பவனி கோயிலில் இருந்து தொடங்கி திருத்துவபுரம், மாறாசேரி மடம், கழுவன்திட்டை, நரியன்விளை, கைப்பிரிவிளை வழியாக கோயிலை வந்தடைகிறது. இரவில் அம்மனுக்கு ஆறாட்டு பூஜையும், தீபாராதனையும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com