சாமிதோப்பு தலைமைப் பதி விவகாரம்: 18இல் உண்ணாவிரதப் போராட்டம்: பாலபிரஜாபதி அடிகளார்

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் நடைபெற்ற தமிழக இந்து அறநிலையத் துறையின்

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் நடைபெற்ற தமிழக இந்து அறநிலையத் துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 18ஆம் தேதி சாமிதோப்பில் அறவழி உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ளதாக தலைமைப் பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் தெரிவித்தார்.
சாமிதோப்பு அன்பு வனத்தில் அய்யா வைகுண்டர் மனுபிறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பால பிரஜாபதி அடிகளார் பேசியது: 
சாமிதோப்பு தலைமைப் பதியைக் கைப்பற்ற நினைக்கும் செயல் ஒருபோதும் நடக்காது. இப்பிரச்னை ஒரு கோயில் பிரச்னை அல்ல. கொள்கை சார்ந்த பிரச்னை. ஒரு கூட்டத்தாரை மட்டுமல்ல பல கூட்டத்தாரை பாதிக்கும் பிரச்னை. இதுதொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுத்து மத்திய அமைச்சர் மற்றும் தமிழகத்தின் துறைசார்ந்த அமைச்சர்கள், ஏனைய அமைச்சர்கள் அதிகாரிகள் எல்லோரும் பேசினர். ஆனால், அவ்வாறு பேசி எங்களுக்கு எந்த தீர்வோ, முடிவோ இந்த அரசால் எடுக்க முடியவில்லை.
எனவே, அடுத்தகட்டமாக வரும் 18ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் அறவழி உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பிக்கிறோம். இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். குறிப்பாக, இந்திய அளவில் சீக்கிய சமயத்தைச் சார்ந்தவர்கள், கர்நாடகத்தைச் சேர்ந்த லிங்காயத்து சமுதாயத்தினர் பங்கேற்கின்றனர். இந்த பிரச்னையை தேசிய அளவில் கொண்டுசெல்வோம். தமிழகத்திலும் அடையாள உண்ணாவிரதத்துக்குப் பின், அரசு அசைந்து கொடுக்கவில்லை என்றால், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தை இணைத்து மண்டல அளவிலான முழு அடைப்பு நடத்தப்படும்.
மார்ச் 18ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் வருகின்றனர். போராட்டத்தை நான் தொடங்கிவைக்கிறேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com