எஸ்எஸ்எல்சி தேர்வு: குமரியில் 400 மாணவர்கள் 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவர், மாணவிகளில் 400 பேர் 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவர், மாணவிகளில் 400 பேர் 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 426 பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 820 மாணவர்களும், 12 ஆயிரத்து 105 மாணவிகளும் என, மொத்தம் 23 ஆயிரத்து 925 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 23 ஆயிரத்து 463 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 81 மாணவர்களும், 319 மாணவிகளும் என 400 மாணவர், மாணவிகள் 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இதே போல் 451 மதிப்பெண்ணில் இருந்து 480 மதிப்பெண் வரை 673 மாணவர்களும், 1823 மாணவிகளும் என 2496 பேர் எடுத்துள்ளனர். 426 மதிப்பெண்களில் இருந்து 450 மதிப்பெண் வரை 857 மாணவர்களும், 1832 மாணவியர்களும் என 2689 பேர் எடுத்துள்ளனர். 401 மதிப்பெண்ணில் இருந்து 425 வரை 1180 மாணவர்களும், 1719 மாணவியரும் என 2899 பேர் பெற்றுள்ளனர். 301 முதல் 400 மதிப்பெண் வரை 5169 மாணவர்களும், 4835 மாணவியரும் என 10,004 பேர் எடுத்துள்ளனர். 201 மதிப்பெண்ணில் இருந்து 300 வரை 3420 மாணவர்களும், 1467 மாணவிகளும் என 4887 பேர் பெற்றுள்ளனர். 176 மதிப்பெண்ணில் இருந்து 200 வரை 203 மாணவர்களும், 58 மாணவியர்களும் என 261 பேர் பெற்றுள்ளனர். 175 மதிப்பெண்ணிற்கு குறைவாக 289 பேர் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com