நிபா வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் அச்சப்படதேவையில்லை: ஆட்சியர்

நிபா வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் மக்கள் அச்சப்படதேவையில்லை என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.

நிபா வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் மக்கள் அச்சப்படதேவையில்லை என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.
விளவங்கோடு வட்டம், அடைக்காகுழி அரசு நடுநிலைப் பள்ளியில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பேசியது:
பொதுமக்கள் அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் குறித்து தெரிந்து கொண்டு, அதற்காக விண்ணப்பித்து உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.
இம்மாவட்டத்தில் வாழைக் கன்றுகள் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள், சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தை பயன்படுத்தி, வாழையோடு காய்கனிகளையும் பயிரிட்டு அதிக லாபத்தை ஈட்டலாம். நிபா வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் மக்கள் அச்சப்படதேவையில்லை. 141 தனியார் மருத்துவமனைகளிலும், 11 அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் காரணமாக வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொடர்ந்து ஆட்சியர், 12 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, ஒரு பயனாளிக்கு விதவை உதவித் தொகைக்கான ஆணை, வேளாண்மைத்துறை மூலம் 5 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு மண்வள அட்டை ஆகியவற்றை வழங்கினார்.
முகாமில், பத்மநாபபுரம் சார்-ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, இணை இயக்குநர் (வேளாண்மை துறை) ந.தெய்வநாயகம், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) க. குணபாலன், துணை இயக்குநர் (தோட்டக்கலைதுறை) அசோக் மேக்ரின், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் கதிர்வேலு, மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் பியூலா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பேச்சியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com