மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் இணைக்க சிறப்பு ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   கன்னியாகுமரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதற்கான சிறப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்திட வேண்டும்.     இம்மாவட்டத்தில்,  18 வயது நிரம்பிய சுமார் 12 ஆயிரம்  மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.  இவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பொருட்டு இதுவரையில் வாக்காளராக பெயர் சேர்க்க விண்ணப்பிக்காதவர்கள்,  அவர்களது தொகுதிக்கு உள்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலக மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் படிவம் 6 இன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.  மேலும்  w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n   என்ற இணையதளம் மூலமும் மனுக்களை பதிவேற்றம் செய்யலாம். 
இது குறித்த சந்தேகங்களை,  மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04652-279086 என்ற எண் மூலம் தகவல்களை பெறலாம். மேலும்,  கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு 9489265200, நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 9626489198, குளச்சல் தொகுதிக்கு, 9385425604, பத்மநாபபுரம் தொகுதிக்கு, 9385425604, விளவங்கோடு தொகுதிக்கு 9487236124, கிள்ளியூர் தொகுதிக்கு, 9487236124,  ஆகிய செல்லிடப்பேசி எண்களில், தங்களது வாக்காளர் அடையாள அட்டைஎண், பெயர் போன்ற விவரங்களை அந்தந்த தொகுதிக்குள்பட்ட தேர்தல் துணைவட்டாட்சியர் தொலைபேசி எண் மற்றும் கட்செவி ஆப் மூலம் தெரிவிக்கலாம்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com