குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித் தேரோட்டம்

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி குறுக்குத்துயில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேர்த் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. மேலும், தினசரி சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவமும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் கோயில் வளாகத்தில் உருகு சட்டசேவை நடைபெற்றது.  அதன்பின் மாலையில் சிகப்பு சாத்தி தங்கச்சப்பரத்தில் சுப்பிரமணியசாமி திருநெல்வேலி மாநகருக்கு எழுந்தருளினார். திருப்பணிவிநாயகர் கோயில் அருகே சுவாமி வந்தபோது, விலைமதிப்பில்லாத வைர கிரீடம் சுவாமிக்கு சூட்டப்பட்டது. அதன்பின்பு பக்தர்கள் வழங்கிய பன்னீர் சுவாமியில் பாதத்தில் ஊற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் திருநெல்வேலி ரதவீதியில் வலம்வர சுவாமியை பக்தர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து திருநெல்வேலி நகரின் நான்கு ரத வீதிகளிலும் சுப்பிரமணியர் வலம் வந்தார்.  செவ்வாய்க்கிழமை காலையில் வெள்ளை சாத்தியும், மாலையில் பச்சை சாத்தியும் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
விழாவின் சிகர நிகழ்வாக வியாழக்கிழமை (செப். 15) காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க ரதவீதிகளில் தேர் வலம் வந்தது. வெள்ளிக்கிழமை (செப்.16) காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com