கோவில்பட்டி அருகே புற்றுநோய் பாதிப்பால் கிராம மக்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயினால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 33 பேர் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோவில்பட்டி அருகே புற்றுநோய் பாதிப்பால் கிராம மக்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயினால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 33 பேர் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட அய்யனார்ஊத்து, ஏ. குப்பனாபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது, அய்யனார்ஊத்து ஊராட்சி.
இந்த ஊராட்சியில் சுமார் 4,500 மக்கள் வசித்து வருகின்றனர். இதில் அய்யனார்ஊத்தில் சுமார் 3200 மக்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் பாய் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் சீவலப்பேரி குடிநீர் வசதி உள்ளது. ஆனால் குடிநீர் 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதி மக்கள் ஆழ்குழாய் கிணறு, குளம் வழியாகவும் தண்ணீரை புழக்கத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரப் பணி துணை இயக்குநர் போஸ்கோராஜாவிடம் கேட்ட போது அவர் கூறியது:
அய்யனார்ஊத்து கிராமத்தில் ஆய்வு செய்த போது புற்று நோயினால் இறந்தது உறுதி செய்யப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. புற்று நோய் ஏற்படுவதற்கான காரணம் குறித்து உயர் அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுவரை 33 பேர் சாவு
  அய்யனார் ஊத்து பகுதியைச் சேர்ந்த பக்கீர்மைதீன் மகன் ஹன்சா (41) என்பவர் செய்தியாளரிடம் கூறியாதவது:
இப்பகுதி பொதுமக்கள் வாய் புற்றுநோய், இரத்த புற்றுநோய், இருதய புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப் பை புற்றுநோய், தலை புற்றுநோய் என பல்வேறு புற்று நோய்களால் பாதிக்கப்பட்டு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 4 பேர் புற்று நோய் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, இப்பகுதியில் உயர் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு  புற்று நோய் வருவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யவேண்டும். இதற்கான சிகிச்சை மையங்களை அருகில் உள்ள கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com