ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி ஆராதனை

கோவில்பட்டி தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயத்தில் சத்குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் 39ஆவது ஆண்டு ஆராதனை விழா இரு நாள்கள் நடைபெற்றது.

கோவில்பட்டி தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயத்தில் சத்குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் 39ஆவது ஆண்டு ஆராதனை விழா இரு நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பாகவத சிரோன்மணி, பாகவத ரத்னா, பாகவத சாம்ராட் பூஜ்யஸ்ரீ நாகராஜ பாகவதர் குடும்பத்தாரின் நாம சங்கீர்த்தனம் பஜனை நடைபெற்றது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு விஷேச பூஜையும், 9 மணி முதல் ஸ்ரீ ரங்கம் ப்ரம்ம ஸ்ரீ இராமசந்திர பாகவதர் மற்றும் கோவில்பட்டி பஜனாம்ரத மண்டலியினரின் தலைமையில் சிறப்பு பஜனை, அபிஷேகம் மற்றும் சுமங்கலி பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், பின்னர் 1008  வடை மாலை சாத்தி ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு ஸ்ரீ கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பஜனை நடைபெறும். ஏற்பாடுகளை ஸ்ரீ சத்குரு ராகவேந்திரா ஸ்வாமி ஆராதனை கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com