தூத்துக்குடி மாவட்டத்தில் படைவீரர் கொடிநாள் வசூல் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியை  மாவட்ட  ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியை  மாவட்ட  ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியை  மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி சார் ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த்,   வட்டாட்சியர் ஆகியோர் தூத்துக்குடி வட்டத்துக்கான உண்டியல் வசூலை ஊர்காவல் படையினர் மற்றும் தேசிய மாணவர் படையினர் மூலம் தொடங்கி வைத்தனர்.
 2016 ஆம் ஆண்டு படைவீரர் கொடிநாளுக்கு அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட அதிகமாக வசூல் செய்து மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் சிறந்த வசூல் புரிந்த மாவட்டமாக கருதப்படுகிறது. எனவே, நிகழாண்டிலும் கொடிநாள் வசூலில் முதலிடம் பிடிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.  தொடர்ந்து, படைப்பணி முடித்து வெளிவந்த படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர், போர் விதவையருக்கு படைப்பணியில் உள்ள வீரர்களின் குடும்பத்தினருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்ககில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  
கோவில்பட்டி:படைவீரர்களுக்கான கொடி நாளையொட்டி வியாழக்கிழமை கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் கொடி நாள் வசூல் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம் கொடியசைத்து தொடங்கி வைத்து,   தனது சார்பாக ரூ.500-யை கொடி நாள் உண்டியலில் செலுத்தினார்.  அதனைத் தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர் அப்பனராஜ், கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் ஆகியோர் கொடி நாள் உண்டியலில் பணம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. 
இதில், வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் மற்றும் திட்ட அலுவலர் தர்மராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கொடி நாள் விழிப்புணர்வுப் பேரணியை வட்டாட்சியர் முருகானந்தம் கொடி நாள் உண்டியலில் பணம் செலுத்தி, தொடங்கி வைத்தார். 
இதில் துணை வட்டாட்சியர்கள் மாடசாமி, அய்யப்பன், வேலம்மாள், வருவாய் ஆய்வாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், கயத்தாறு பாபா மெட்ரிக் பள்ளி, அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பொதுமக்கள், வியாபார நிறுவனங்களிடம் கொடி நாள் நிதி வசூலித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com