தேசிய சிலம்பப் போட்டி: நாலாட்டின்புத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் தகுதி

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் நாலாட்டின்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் நாலாட்டின்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் இம்மாதம் 1ஆம் தேதி முதல் 3 நாள்கள் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர், மாணவிகள் சுமார் 1,000 பேர் பங்கேற்றனர்.
இதில், நாலாட்டின்புத்தூர் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவர் காளிராஜ் 50 கிலோ எடை பிரிவில் முதலிடம், 10ஆம் வகுப்பு மாணவர் கிருஷ்ணகண்ணன் 65 கிலோ எடை பிரிவில் முதலிடம், 10ஆம் வகுப்பு மாணவர் கோகுலகண்ணன் 75 கிலோ எடை பிரிவில் முதலிடம், 8ஆம் வகுப்பு மாணவி பவானி 45 கிலோ எடை பிரிவில் முதலிடம், 7ஆம் வகுப்பு மாணவி முத்துலட்சுமி 35 கிலோ எடை பிரிவில் முதலிடமும் பெற்று, அடுத்த மாதம் புதுதில்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளையும், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கணேசவேல், பயிற்றுநர் மாரிக்கண்ணன் ஆகியோரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜேஸ்வரி, தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, தலைமையாசிரியை சண்முகவடிவு, உதவித் தலைமையாசிரியர் செந்தில்வேல்முருகன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com