கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை கொடியேற்றம்

கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் சமேத ஸ்ரீ சிவகாமி அம்மாள் கோயிலில் திருவாதிரை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் சமேத ஸ்ரீ சிவகாமி அம்மாள் கோயிலில் திருவாதிரை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக் கோயிலில் ஜன.11 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி விழா 10 நாள்கள் நடைபெறும். திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 4.30 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு கொடியேற்றம், 7மணிக்கு திருவெம்பாவை, 8மணிக்கு யாகசாலை பூஜை, இரவு மாணிக்கவாசகர் வழிபாடு ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து 10 நாள்களும்  சுற்று வட்டார கிராம மக்கள் சார்பில் திருவெம்பாவை, யாகசாலை பூஜை, மாணிக்க வாசகர் வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. திருவாதிரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10ஆம் திருவிழா ஜன. 11ஆம்தேதி  காலை கணபதி ஹோமம்,36 வகையான சிறப்பு அபிஷேகம்,ஆருத்ரா தரிசனம்,மஹாதாண்டவ தீபாராதனை, பஞ்சமூர்த்தி திருவீதி உலா, திருவிளக்கு பூஜை, சேர்க்கை ஆகியன நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com