விளாத்திகுளத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டக் குழு நிர்வாகிகள் செல்வராஜ், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விளாத்திகுளம் பகுதியில் மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். மிளகாய், மல்லி, வெங்காயம் உள்ளிட்டவற்றைக் காப்பீட்டு பயிர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.  பின்னர்,விவசாயிகள் வறட்சியால் கருகிய சோளம், மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாட்சியர் ஈஸ்வரநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சுந்தர்ராஜன், பால்ராஜ்,சங்கரசுப்பு மற்றும் வேலிடுபட்டி, ராமச்சந்திராபுரம்,சிங்கிலிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com