கோவில்பட்டியில் ஜனவரி 4 மின்தடை

கோவில்பட்டியில் புதுரோடு பகுதியில் புதன்கிழமை (ஜன.4) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் புதுரோடு பகுதியில் புதன்கிழமை (ஜன.4) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி மின் விநியோக செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேம்பார் - பருவக்குடி சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்வதற்காக நகர் மற்றும் கிழக்கு விநியோகப் பிரிவுக்குள்பட்ட புதுரோடு, மில் தெரு, காளியப்பர் தெரு, ஆழ்வார் தெரு, செல்லப்பாண்டியன் தெரு, பங்களாத் தெரு ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com