பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் வாழை, மிளகாய், வெங்காய பயிர்கள் சேர்ப்பு: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் வாழை, மிளகாய், வெங்காயம் ஆகிய பயிர்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் வாழை, மிளகாய், வெங்காயம் ஆகிய பயிர்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-17ஆம் ஆண்டு ராபி பருவத்துக்கான பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை, மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே, அந்தப் பயிர்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு பயிர்க் காப்பீடு பிரீமியமாக வாழைக்கு ரூ. 2475-ம், மிளகாய்க்கு ரூ. 915-ம், வெங்காயத்துக்கு ரூ. 863-ம் உடனடியாக செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  
விவசாயிகள், பிரீமியக் கட்டணத்தை தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில் செலுத்தலாம்.
மேலும், விரிவான விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்,  தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பிரீமியம் தொகையை செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com