கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி வட்டத்தில் உள்ள காமநாயக்கன்பட்டி குறுவட்டப் பகுதிகளை புதிதாக உதயமாகவுள்ள கயத்தாறு வட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டத்தில் உள்ள காமநாயக்கன்பட்டி குறுவட்டப் பகுதிகளை புதிதாக உதயமாகவுள்ள கயத்தாறு வட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 கோவில்பட்டி வட்டத்தில் இயங்கி வரும் காமநாயக்கன்பட்டி குறுவட்டப் பகுதியான காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி, சால்நாயக்கன்பட்டி, அச்சங்குளம், கோட்டையூர், இலந்தம்பட்டி, முடுக்கலாங்குளம் ஆகிய பகுதிகளை புதிதாக உதயமாகவுள்ள கயத்தாறு வட்டத்துடன் இணைக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 காமநாயக்கன்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் தேவசகாயம் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் தேவதாஸ், தங்கப்பாண்டியன் (அச்சங்குளம்), பொன்னம்மாள் ராஜகோபால் (குருவிநத்தம்), காசியம்மாள் பாலசுப்பிரமணியன் (முடுக்கலாங்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், காமநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜோக்கிம் மரிய வியாகப்பன், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜார்ஜ் நியூட்டன், வட்டார வியாபாரிகள் சங்கத் தலைவர் சூசைபிரான்சிஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
 இதில், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி, சால்நாயக்கன்பட்டி, அச்சங்குளம், கோட்டையூர், இலந்தம்பட்டி, முடுக்கலாங்குளம் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com