தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண் வாக்காளர்கள்- 6,93,149 பெண் வாக்காளர்கள்-7,14,276

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 7 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 7 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர்.
  தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ம. ரவிகுமார்  வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ராசையா பெற்றுக் கொண்டார். அப்போது, அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.
 பின்னர் ஆட்சியர் அளித்த பேட்டி: 1.1.2017 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. 1.9.2016 முதல் 30.9.2016 வரை பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனறர்.
  இறுதி வாக்காளர் பட்டியலின் கணக்குப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 6 லட்சத்து 93 ஆயிரத்து 149 ஆண் வாக்காளர்களும், 7,14,276  பெண் வாக்காளர்களும், இதர பிரிவைச் சேர்ந்த 82 வாக்காளரும் என மொத்தம் 14 லட்சத்து 7 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர்.
  புதிதாக 13 ஆயிரத்து 902 ஆண்கள், 16 ஆயிரத்து 14 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 29 ஆயிரத்து 933 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள் என 2 ஆயிரத்து 123 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே தொகுதிக்குள் 1586 பேருக்கு முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 429 பேருக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 857 மையங்களில் 1562 வாக்குச் சாவடிகள் உள்ளன. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கான வண்ண புகைப்பட அடையாள அட்டை ஜனவரி 25 ஆம் தேதி அந்தந்த பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்குச்சாவடி மையங்களில் வழங்கப்படும்.
 தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 401 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 716 பெண் வாக்காளர்களும் 34 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 151 வாக்காளர்கள் உள்ளனர்.
  விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 511 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 758 பெண் வாக்காளர்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 270 வாக்காளர்கள் உள்ளனர்.
  திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 458 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 243 பெண் வாக்காளர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 714 வாக்காளர்கள் உள்ளனர்.
  ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 165 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 507 பெண் வாக்காளர்களும், 5 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 677 வாக்காளர்கள் உள்ளனர்.
 ஓட்டப்பிடாரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 688 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 பெண் வாக்காளர்களும் 17 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 911 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 926 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 846 பெண் வாக்காளர்களும், 12 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 784 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com