மாநில ஹாக்கி: கோவில்பட்டி பாலிடெக்னிக் அணி சாம்பியன்

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணியினர் சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணியினர் சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் கலந்துகொண்டன.
சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் திருச்சி ஜே.ஜே. பாலிடெக்னிக் கல்லூரி அணியும், சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதியதில் 4க்கு 0 என்ற கோல்கணக்கில், திருச்சி அணியினர் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், ஈரோடு ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில், கோவில்பட்டி கல்லூரி அணியினர் 6க்கு 5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இறுதிப் போட்டியில், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், திருச்சி ஜே.ஜே. பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணியினர் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் குப்புசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் சுரேஷ்பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார். முதுநிலை விரிவுரையாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் சிவராஜ் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம் ஆலோசனையின்படி, கல்லூரி முதல்வர் தலைமையில், உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com