பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

தூத்துக்குடி அருகேயுள்ள காலாங்கரை கிராமத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி அருகேயுள்ள காலாங்கரை கிராமத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும், தூத்துக்குடி ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கமும் இணைந்து கோரம்பள்ளம் ஊராட்சிக்குள்பட்ட காலாங்கரை கிராமத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு விளையாடும் உரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டியை நடத்தினர்.
தூத்துக்குடி ஸ்பிக்நகர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சாகு தலைமை வகித்தார். சங்கத்தின் அடுத்தக்கட்டத் தலைவர் பிரபாகரன் பேசினார்.
தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டுகளான உறி அடித்தல், தவளை ஓட்டம், இசைப்பந்து, முறுக்கு கடித்தல் போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கப் பொருளாளர் வன்னியராஜன், கோரம்பள்ளம் ஊராட்சி முன்னாள் தலைவர் தெய்வநாயகம், கல்லூரி பேராசிரியர்கள், இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் சுதாகுமாரி மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com