உடன்குடியில் கந்தூரி விழா

உடன்குடி பெரிய தெரு முஹ்யித்தீன்(ரலி) ஆண்டவரின் 877வது கந்தூரி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

உடன்குடி பெரிய தெரு முஹ்யித்தீன்(ரலி) ஆண்டவரின் 877வது கந்தூரி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
பிரசித்தி பெற்ற இத்தர்காவில் கந்தூரி விழாவையொட்டி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு கொடிச்சுற்று ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலம் பின்னர் பள்ளியை அடைந்தவுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மௌலூது ஷரீபு ஆரம்பிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை(ஜன.10)காலை 7 மணிக்கு வரி,காணிக்கைகளுக்கு நேர்ச்சை உணவு வழங்கல்,மாலை 3 மணிக்கு பள்ளிவாசலில் மௌலூது ஷரீபு ஓதப்படும்.
தொடர்ந்து சிறுவர்,சிறுமியர்களின் கலைநிகழ்ச்சிகள்,மார்க்க சொற்பொழிவுகள் நடைபெறும். சிறப்பு அழைப்பாளராக மஸ்ஜித் லஜ்துல் முஹ்ஸிறீன் தலைமை இமாம் பங்கேற்று பேசுகிறார். ஏற்பாடுகளை ஊர் ஜமாத்தார்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com