ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் திருவாதிரை விழாவையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் திருவாதிரை விழாவையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் பாத்தியப்பட்ட இக் கோயிலில் திருவாதிரை திருவிழா எட்டாம் நாளான திங்கள்கிழமை  ஸ்ரீமாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் திருவெம்பாவை பாடி தீபாராதனைகளும்,  ஸ்ரீமாணிக்க வாசகர் கிரிவீதி உலாவும் நடைபெற்றது.
ஜன. 11ஆம் தேதி திருவாதிரை அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீநடராஜருக்கும், ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கும், ஸ்ரீமாணிக்கவாசகர் மற்றும் காரைக்கால் அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெறுகின்றன. பின்னர் திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை,கால சந்தி பூஜை முதலியன நடைபெறும்.
தொடர்ந்து கோ பூஜை,களி நிவேதனம்,கருப்பு இரட்சை, ஸ்ரீநடராஜருக்கு தாண்டவ தீபாராதனைகள் நடைபெறும். பின்னர் திருவெம்பாவை பாடி தீபாராதனை யும்,பஞ்சபுராணம் பாடுதலும் நடைபெறும். தொடர்ந்து ஸ்ரீநடராஜர் கோயில் பிரகார கிரி வீதி வலம் வருதல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com