பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி, கோவில்பட்டியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி, கோவில்பட்டியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களில் பராமரிப்பு இல்லாமல் காணப்படும் கணினி உள்ளிட்ட மின்னணு பொருள்களை முறையே பராமரிக்க வேண்டும்; 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப இடமாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் பால்ராஜ் பட்டுகுமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி செயலர் ஜெயமுருகன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவில்பட்டி:   பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளைத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். உதவிச் செயலர் கணேசன், பொருளாளர் திருவட்டப்போத்தி, ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஊழியர் சங்கச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த ஊழியர் சங்கச் செயலர் பாலசிங், ஊழியர் சங்க உதவித் தலைவர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட உதவிச் செயலர் பாலகிருஷ்ணன், அமைப்புச் செயலர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com