9 இடங்களில் இன்று அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.13) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.13) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
 அதன்படி,  தூத்துக்குடி வட்டத்தில் மாப்பிள்ளையூரணி, ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பராக்கிரமபாண்டி கிராமம், திருச்செந்தூர் வட்டத்தில் மணப்பாடு, சாத்தான்குளம் வட்டத்தில் சாத்தான்குளம், கோவில்பட்டி வட்டத்தில் ராஜாபுதுக்குடி, விளாத்திகுளம் வட்டத்தில் வாதலக்கரை, எட்டையபுரம் வட்டத்தில் மீனாட்சிபுரம் மற்றும் அய்யாக்கோட்டையூர், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் கச்சேரி தளவாய்புரம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் முகாம் நடைபெறுகிறது.
 முகாமில், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் உள்ளிட்ட மனுக்களை அளித்து உடனடி தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com