கயத்தாறு வட்டத்தில் சேர்க்க எதிர்ப்பு: கிராமத்தில் கருப்பு கொடி கட்டிய மக்கள்

கயத்தாறு புதிய வட்டத்துடன் முடுக்கலாங்குளம் ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி அந்த கிராம மக்கள் தெருக்களில் கருப்புக் கொடி கட்டி  வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கயத்தாறு புதிய வட்டத்துடன் முடுக்கலாங்குளம் ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி அந்த கிராம மக்கள் தெருக்களில் கருப்புக் கொடி கட்டி  வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காமநாயக்கன்பட்டி குறுவட்டத்தில் காமநாயக்கன்பட்டி, குருவிகுளம், அச்சங்குளம், முடுக்கலாங்குளம் ஊராட்சிகள் உள்ள நிலையில், கயத்தாறு புதிய வட்டத்துடன் முடுக்கலாங்குளம் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி தங்கள் வீடு, தெருக்களில் கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் எனக் கூறி, ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி- சேலையை வாங்கவும் மறுத்து வருகின்றனராம்.
கழுகுமலையை... இதேபோல், கயத்தாறு வட்டத்தில் கழுகுமலையை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் கண்ணபிரான், வட்டாட்சியர் ராஜ்குமார் ஆகியோரிடம் மக்கள் கழுகுமலைப் பகுதி வியாழக்கிழமை மனு அளித்தனர்.
கோவில்பட்டி வட்டத்தில் கழுகுமலை, நாலாட்டின்புத்தூர், கயத்தாறு, கடம்பூர், காமநாயக்கன்பட்டி, இளையரசனேந்தல் ஆகிய குறுவட்டங்கள் உள்ளன நிலையில், கழுகுமலையை கயத்தாறுடன் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com