கோவில்பட்டி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில்  சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில்  சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி பொங்கல் விழாவை தொடங்கிவைத்தார்.
சாதி, மத பேதமின்றி அனைத்துத் துறை மாணவர், மாணவிகள் தனித்தனியாக கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டனர். பின்னர், அங்குள்ள கல்வி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மாணவர், மாணவிகளின் கண்கவர் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களின் சிலம்பாட்டமும் நடைபெற்றன.  ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவி ஜெயபாரதி தலைமையில் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்கள் செய்திருந்தனர்.
கண்ணா மெட்ரிக் பள்ளி: கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள ஸ்ரீகண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, மாணவர், மாணவிகளின் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியை மருத்துவர் பிரியங்கா தொடங்கிவைத்தார். அனைவரும் பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.
மாணவிகளின் கும்மிப்பாட்டு, கோலாட்ட நடனம், கோலப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் சம்பத் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, முதல்வர் முருகன், ஆண்டாள் ரெங்க மன்னார் பஜனை குழுத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்,  ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com