மாநில செயல் திட்ட போட்டி: சாகுபுரம் பள்ளி சாதனை

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற சென்னை வெள்ளம் பற்றிய செயல் திட்டத்தில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற சென்னை வெள்ளம் பற்றிய செயல் திட்டத்தில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள சிபிஎஸ்இ தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில், இயற்கைச் சீற்ற பாதிப்பிலிருந்து விடுபடுதல்,  நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ஆகிய தலைப்புகளில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே செயல்திட்டப் போட்டி நடைபெற்றது.
இதில், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி சார்பில் ஒரு குழுவுக்கு 3 மாணவர், மாணவிகள் வீதம் 33 குழுக்கள் கலந்துகொண்டன.
இதில் ஆர். ஆலன்பால், எஸ். ஸ்ரீஹரிவாஸ், எஸ். ஐரிஷ்வருண் ஆகிய 3 பேர் கொண்ட குழு மாநில அளவில் 2ஆவது இடத்தையும், ஆர். சக்திஷ், ஏ. அஷ்வின் பிரபாகர், எம். பாலசெளந்தர் ஆகிய 3 பேர் கொண்ட குழு மாநில அளவில் 3ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பாலகுருசாமி சான்றிதழ் மற்றும் ரூ.27 ஆயிரத்துக்கான காசோலைகளை பரிசாக வழங்கினார்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியைகளையும் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த பொதுமேலாளர் சி. சந்திரசேகரன், பொதுமேலாளர் ஆர். பசுபதி, பள்ளி முதல்வர் ஆர். சண்முகானந்தன், துணை முதல்வர்கள் வெ. செல்வராஜ், வனிதா வி. ராயர், மதன் வெற்றிவேல் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com