"ஹோவர் கிராப்ட் ரோந்துக் கப்பலை பொதுமக்கள் இன்று பார்வையிடலாம்'

தூத்துக்குடி கடற்கரைக்கு வந்துள்ள நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் ரோந்துக் கப்பலை பொதுமக்கள் சனிக்கிழமை (ஜன. 21) பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடற்கரைக்கு வந்துள்ள நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் ரோந்துக் கப்பலை பொதுமக்கள் சனிக்கிழமை (ஜன. 21) பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான எச்.159 என்ற ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல் தூத்துக்குடி கடல் பகுதிக்கு வந்துள்ளது. நீரிலும், நிலத்திலும் செல்லும் வசதி படைத்த இந்த ரோந்துக் கப்பல் தற்போது தெர்மல்நகர் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ரோந்துக் கப்பலை பொதுமக்கள், மாணவ, மாணவியர் பார்வையிட சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, துறைமுக விருந்தினர் மாளிகை அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலை பொதுமக்கள் பார்த்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com