ரோந்துக் கப்பலை பார்வையிட்ட பொதுமக்கள்

தூத்துக்குடி வந்த அதிநவீன வசதி கொண்ட நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய "ஹோவர் கிராப்ட்' ரோந்துக் கப்பலை சனிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி வந்த அதிநவீன வசதி கொண்ட நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய "ஹோவர் கிராப்ட்' ரோந்துக் கப்பலை சனிக்கிழமை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான "ஹோவர் கிராப்ட்' ரோந்து கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய சிறிய ரக வகையான இந்தக் கப்பல் 20 மீட்டர் நீளமும், 30 டன் எடையும் கொண்டது ஆகும். மணிக்கு 45 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடியது. தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் கடந்த 3 நாள்களாக ரோந்து பணியில் ஈடுபட்ட இந்தக் கப்பலை பொதுமக்கள் பார்வையிட சனிக்கிழமை அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, தெர்மல்நகர் புதிய கடற்கரைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பலை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அவர்களுக்கு அங்கு இருந்த கப்பல் படை அதிகாரிகள், கப்பலின் செயல்பாடுகள் குறித்தும், அதில் உள்ள அதிநவீன கருவிகள் பற்றியும் விளக்கம் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com