ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1,000ஆவது ஆண்டு அவதாரப் பெருவிழா

ஸ்ரீபகவத் ராமானுஜர் 1,000ஆவது ஆண்டு அவதாரப் பெருவிழா கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் நடைபெற்றது.

ஸ்ரீபகவத் ராமானுஜர் 1,000ஆவது ஆண்டு அவதாரப் பெருவிழா கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் நடைபெற்றது.
கழுகுமலை வட்டார கம்மவார் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். லட்சுமி சீனிவாசா வித்யாலயா பள்ளித் தாளாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். ஸ்ரீ ஆண்டாள் நர்த்தன சபாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசா ராமானுஜதாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடம் 24ஆவது பட்டம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் ஆசியுரை வழங்கினார். திருவேடகம் விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் வன்னியராஜன், பஜ்ரங் தளம் தமிழக மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், கோவில்பட்டி ஸ்ரீ ராமானுஜர் தொண்டர் குழாமைச் சேர்ந்த ஸ்ரீ உ.வே. கோவிந்தராஜ ஐயங்கார், பாரதிய கிசான் சங்க மாநிலச் செயலர் பார்த்தசாரதி, மாவட்டச் செயலர் சேசு, மாவட்ட பசு பாதுகாப்புத் தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர்.
ஏற்பாடுகளை பாரதிய கிசான் சங்கம் மற்றும் விழாக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com