கோவில்பட்டியில் விவசாயி தற்கொலை

பருவமழை பொய்த்ததையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி மனமுடைந்த நிலையில் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பருவமழை பொய்த்ததையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி மனமுடைந்த நிலையில் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர் ரயில்வே பீடர் சாலை நம்மாழ்வார் தெருவைச் சேர்ந்த வலங்கையா மகன் மாரிச்சாமி (55). விவசாயி மற்றும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இதே பகுதியில் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அதில் உளுந்து மற்றும் மக்காச்சோளம் பயிரிட்டதாகவும் கூறப்படுகிறது.
பருவமழை பொய்த்ததினால் இவரது நிலத்தில் எந்தவொரு மகசூலும் கிடைக்காததையடுத்து மனம் வருந்திய நிலையில் இருந்து வந்த இவர் திங்கள்கிழமை வழக்கம் போல ஆடுகளை மேய்க்கச் சென்றாராம். இந்நிலையில், நாலாட்டின்புத்தூர் காட்டுப் பகுதியில் மாரிச்சாமி மயங்கிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்தார்.
இறந்த மாரிச்சாமிக்கு ஆவுடையம்மாள் (48) என்ற மனைவியும், கிருஷ்ணவேணி (25) என்ற மகளும், கண்ணன் (18) என்ற மகனும் உள்ளனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com