மீன் இறங்குதளங்களை சுகாதாரமாக பராமரிக்க பயிற்சி முகாம்

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளங்களை சுகாதாரமான முறையில் பராமரித்தல் மற்றும் மேலாண்மை செய்தல் குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளங்களை சுகாதாரமான முறையில் பராமரித்தல் மற்றும் மேலாண்மை செய்தல் குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், தமிழ்நாடு மீன்வளத் துறையும் இணைந்து நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி மூலம் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளங்களை சுகாதாரமான முறையில் பராமரித்தல் மற்றும் மேலாண்மை செய்தல் என்ற தலைப்பிலான பயிற்சி நடைபெற்று வருகிறது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கடலோர மீன் இறங்கு தளங்களை மேம்படுத்துவதுமே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்தின் முதல் பயிற்சி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் அண்மையில் நடைபெற்றது.
பயிற்சியில் மீன்பிடி துறைமுக மேலாண்மை உறுப்பினர்கள், மீனவர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 50 பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர். மீன்களை கையாளுதல் மற்றும் சுகாதாரமான நடைமுறைகள் மற்றும் மீன்பிடி துறைமுக வளாகத்தின் மேலாண்மை அடிப்படைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை திட்டத்தின் உலக வங்கியின் ஆலோசகரான மார்ட்டின் குமார் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியல், மீன்வளத் துறையின் இணை இயக்குநர் ரீனா செல்வி, கல்லூரி முதல்வர் கோ. சுகுமார், பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com