பெரியதாழை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

பெரியதாழை தூயவர் யோவான் ஸ்தேவான் ஆலயத்தில் காணிக்கை மாதா திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரியதாழை தூயவர் யோவான் ஸ்தேவான் ஆலயத்தில் காணிக்கை மாதா திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிப். 2ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு, தூத்துக்குடி பனிமய மாதா பேராலய அதிபர் லெரின்டிரோஸ் தலைமையில் ஜெபமாலை, மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீரைத் தொடர்ந்து, கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து விழா நாள்களில் தினமும் திருயாத்திரை, திருப்பலி, ஜெபமாலை,பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை ஆசீர், ஆர்.சி. தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
9ஆம் நாளான பிப்.1ஆம் தேதி வெளியூர் வாழ் பெரியதாழை மக்கள், கப்பல் மாலுமிகள் சார்பில் காலை 6.15 மணிக்கு நவநாள் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குரு சகாயம் தலைமையில் பெருவிழா ஆராதனை நடைபெறுகின்றன.  ஜூலியான்ஸ் மச்சாது மறையுரை நடத்துகிறார். 10ஆம் நாளான பிப்.2ஆம் தேதி காலை 7 மணிக்கு பெருவிழா மற்றும் புதுநன்மை திருப்பலி நடைபெறுகிறது. இதில், தூத்துக்குடி திருஇதயங்களின் பேராலய பங்குத்தந்தை ராயப்பன் தலைமை வகித்து சிறப்பு ஆராதனை நடத்துகிறார். பாலக்காடு திருச்சிலுவை நாதர் சபை சகாயவேந்தன் மறையுரை வழங்குகிறார். மாலை 6 மணிக்கு இக்னேசியஸ் அமலதாஸ் தலைமையில் ஜெபமாலை மற்றும் திவ்ய நற்கருணை பவனி நடைபெறுகிறது. சகாயலூட்ரின் மறையுரை வழங்குகிறார்.
பிப்.3ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com