கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில், பாரத மாதா பூஜை கிருஷ்ணன் கோயில் தெருவில் நடைபெற்றது.
இந்து முன்னணி நகரத் தலைவர் காசிமாரியப்பன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மாயக்கூத்தன், மாநிலப் பேச்சாளர் சீத்தாராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இதில், இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜவேல், வெங்கடேஷ், வடிவேல், முத்துராஜா, ராஜேந்திரன், பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ரெங்கநாயகலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.