"தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ. 372 கோடியில் பசுமை சூழலுக்கான நடவடிக்கைகள்'

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ. 372 கோடியில் சுத்தம் மற்றும் பசுமை சூழலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ. 372 கோடியில் சுத்தம் மற்றும் பசுமை சூழலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிகழ் நிதியாண்டில் இதுவரை 37.29 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. துறைமுகத்தில் சுத்தம் மற்றும் சுகாதார வசதிகளின் தேவைகளை அடையாளம் கண்டு, துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களின் மூலமாக சுத்தமான சுற்றுப்புறச் சூழலை உருவாக்க பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
ரூ.2.16 கோடி மதிப்பில் 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ள நிலக்கரி சேமிப்புகிடங்கில் தண்ணீரை அதிக அழுத்ததுடன் வீசக் கூடிய தண்ணீர் அடிப்பான் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.  மேலும் ரூ. 3.22 கோடி திட்ட மதிப்பீட்டில் துறைமுக வளாகத்தில் காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக சுற்றுப்புற காற்று தரம் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
துறைமுகத்தில் ரூ. 38.10 கோடி திட்ட மதிப்பீட்டில், சரக்குகளை கையாளும்போது சரக்குகள் விரயமாகாமல் தடுப்பதற்கு 3 மற்றும் 4 ஆவது சரக்கு தளங்களில் மின்சாரத்தால் இயங்கக் கூடிய 8 நகரும் ஹாப்பர் அமைப்பு செயல்படுத்தப்பட உள்ளது.  மேலும் துறைமுகத்தில் ரூ.225.8 கோடி திட்ட மதிப்பீட்டில் கார்பன் வெளிபாட்டை கட்டுப்படுத்துவதற்காக 25 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
துறைமுகத்தில் ரூ. 1.5 கோடி திட்ட மதிப்பீட்டில் சரக்குகையாளும் தளங்களிலிருந்து கப்பலுக்கு தேவையான மின்சார வசதியை வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ. 92.72 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள இயந்திரமாக்கப்பட்ட திட்டத்தில் 9ஆவது சரக்கு தளத்தில் கையாளப்படும் நிலக்கரியை ஹாப்பர் மூலம் கன்வேயர் வழியாக நிலக்கரி சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது.
இதுதவிர, துறைமுக சரக்கு தளங்கள், சாலைகள் மற்றும் சேமிப்பு இடங்களில் சுத்தம் செய்வதற்கு ரூ. 8.6 கோடி திட்ட மதிப்பீட்டில் இரண்டு சுத்தம் செய்யும் இயந்திரம் இயக்கப்பட்டு வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com